technology

img

சாம்சங் ’கேலக்ஸி எஃப் 23’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் 

இந்தியாவில் அடுத்த மாதம் சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’கேலக்ஸி எஃப் 23’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. 

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைபடுத்தி வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி எஃப் 23 ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்தவுள்ளது. 

இந்த சாம்சங் ’கேலக்ஸி எஃப் 23’ ஸ்மார்ட்போன் 6.41 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை,  750 ஸ்னாப் டிராகன், 7 சீரியஸ் பிராசசர், அமொல்ட் திரை, 6ஜிபி கூடுதல் உள்ளக நினைவகம், 128 ஜிபி  நினைவகம், 48 எம்பி பின்பக்கம் கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ), 13 எம்பி முன்பக்கம் செல்ஃபி கேமரா, 5,000 மெகாவாட் அளவுள்ள பாட்டரி வசதி, ஆண்டிராய்ட் 12 சி-டைப், வைபை 6 என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்திய சந்தையில் ரூ.15,000-30,000 வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

;